புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
புதுக்கவிதை என்பது யாப்பு வடிவமின்றி அல்லது யாப்பு வடிவ மைப்பினின்றி முற்றிலும் மாறுபட்டு படைக்கப்படுவதே புதுக்கவிதை ஆகும்.. புதுக்கவிதைகள் மக்களின் அடிப்படை மனவெழுச்சி உணர்வுகளான நேசம், காதல், மகிழ்ச்சி, அன்பு, பாசம், துக்கம், ஏக்கம், எதிர்பார்ப்பு இவை அனைத்தையும் எளிய சொற்களால் சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதாலும், அனைவருக்கும் புரியும் வகையில் தெளிவாகவும் புதுக்கவிதைகள் இயற்றப்படுகின்றன. மனித மனங்கள் மகிழ்வாள் நிரம்பி வழியும் வகையில் படைக்கப்படுகிறது. புதுக்கவிதையின் தோற்றமும்vவளர்ச்சியும் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
தோற்றம்
கி. பி 20ஆம் நூற்றாண்டு தொடங்கி புதுக்கவிதை தமிழிலக்கியத்தில் தோன்றி சிறப்புப் பெற்றது. பாரதியாரால் இயற்றப்பட்ட
வசன கவிதைகளே' தமிழில் புதுக் கவிதைக்கு முன்னோடியாக அமைந்தது எனில் மிகையன்று. 1910ம் ஆண்டு வால்ட் விட்மன்" எனும் ஆங்கிலக் கவிஞர் எழுதிய "புல் தழ்கள்' என்னும் நூலே புதுக்கவிதையின் முதல் நூலாகும். தொடர்ந்து அமெரிக்க நாட்டவரும் இங்கிலாந்தில் குடியேறியவருமாகிய ஆகிய " எஸ்ரா பவுண்டு" சிறந்த புதுமை வாய்ந்த புதுக்கவிதையை படைத்தார். புதுக்கவிதையை படைத்தார். தொல்காப்பியர் புதிதாகப் பிறந்த இலக்கியத்தை "விருந்து" எனப் பெயரிட்டு சிறப்பிட்டு வரவேற்றார். நன்னூலார் “பழையன கழிதலும் புதியன புகுதலும் வல கால வகையினானே' என்றார். பாரதியாரும் செல்லிதாசன்" என்ற புனைபெயரில் "சானட்"டின் சாயலில் புதுக்கவிதை படைத்திட்டார்.
பாரதியாருக்குப் பின் புதுமைப்பித்தன் புதுக்கவிதை புனையும் பணியினை செவ்வனே தொடர்ந்தார். புதுக்கவிதை மரபுக் கவிதைகள் போல் அல்லாது இலக்கணச் செங்கோல், யாப்பு சிம்மாசனம், எதுகை பல்லக்கு , தனிமொழி சேனை, பண்டித பவனி இவை எதுவும் இல்லாத தம்மைத் தாமே ஆளும் சிறப்புப் பெற்ற தனித்துவம் பெற்று தகளே புதுக்கவிதைகள் ஆகும்.
பிரான்சின் போதலேர் ஜெர்மனியின் ரில்கே. அமெரிக்காவின் வால்ட் விட்மன், இங்கிலாந்தின் எஸ்ரா பவுண்டு, T.S.எலியட் போன்றோரின் முயற்சிகளால் புதுக்கவிதை தோன்றியது. தமிழில் வசனகவிதை" என்றும் பின்பு "சுயேச்சா கவிதை” ‘லகு கவிதை’ விடுநிலைப்பா'' என்றும், "கட்டிலடங்கா கவிதை" எனவும் அழைக்கப்பட்டது.
புதுக்கவிதையின் தோற்றத்திற்கு உரைநடையின் செல்வாக்கு, கவிதையின் செறிவின்மை, அச்சு இயந்திரத்தின் தோற்றம்| மக்களின் மனநிலை மற்றும் மொழிநடையில் தோன்றிய மாற்றங்களே புதுக்கவிதையின் தோற்றத்திற்கு மிக முக்கியக் காரணமாக அமைந்தது
வளர்ச்சி
ஆங்கில வால்ட் விட்மனின் "புல்லின் இதழ்கள்" என்ற கவிதையைப் படித்த பாரதியார் அதனைப் போலவே தமிழிலும் கவிதைபடைக்க வேண்டும் என்ற பேரார்வத்தால் "காட்சிகள்" எனும் பில் புதுக்கவிதை படைத்திட்டார். இதற்கு அவர் இட்ட பெயரே "'வசன கவிதை" என்பதாகும். பாரதியாரின் சுவடுகளிலேயே நான் பிச்சமூர்த்தி, கு.ப. ராசகோபாலன், புதுமைப்பித்தன், வல்லிக்கண்ணன் போன்றோர் புதுக்கவிதை படைத்து தமிழ் புதுக்கவிதைகளை வளர்த்திட்டனர்.,
"வால்ட் விட்மனின்' 'புல்லின் இதழ்கள்' எனும் கவிதையும் பாரதியாரின் வசன கவிதைகளுமே ந. பிச்சமூர்த்தியை ப புதுக்கவிதை எழுதத் தூண்டின. V இவரின் கவிதையில் சமுதாயப் பார்வையும் குறியீட்டுத்தன்மையும் அதிகம் கையாண்டு புதுக்கவிதை படைத்துவிட்டார். மேலும் இவரது "பம்பரம்", "தேசப் பறவை" போன்ற கவிதைகள் அவரது உருவகப் படைப்பிற்கு சிறந்த எடுத்துக்காட்டு
கவிதைகளாகத் திகழ்கின்றன.
புதுக்கவிதை வளர்ந்த காலங்களை மூன்று வகைகளாக பிரிக்கலாம்.
1. மணிக்கொடிக் காலம்
2. எழுத்துக் காலம்
3. வானம்பாடிக் காலம்
இத்தகைய காலகட்டங்களில் தான் தமிழ் இதழ்கள் புதுக்கவிதைக்கு மெருகேற்றி பொலிவு பெறச் செய்தன.
மணிக்கொடிக் காலம்:
1930 முதல் 1945 வரை வெளிவந்த "மணிக்கொடி" என்னும் இதழினால் ஏற்பட்ட புரட்சியே மணிக்கொடிக் காலம் எனப் பெயர் உண்டாகக் காரணம் ஆயிற்று. இக்காலத்து கவிதை இயற்றிய கவிஞர்கள் மரபுக்கவிதையை வெறுத்து புதுக்கவிதையை மட்டும் போற்ற வேண்டும் என்றில்லாமல் புது இலக்கியத் துறையை தோற்றுவிக்க வேண்டும் என்ற சீரிய சிந்தனையுடன் பணியாற்றினர். ஆயினும் இம்முயற்சியானது "ஆற்றில் எதிர்நீச்சல் போடுவது போல" இவர்களுக்கு சற்று கடினமானதாகவே அமைந்தது.
மணிக்கொடி காலத்தில் மணிக்கொடி என்ற இதழ் மட்டுமன்றி, சூறாவளி, காலமோகினி கிராம ஊழியன். சிவாஜி மலர், நவசக்தி, ஜெயபாரதி ஆகிய இதழ்கள் புதுக்கவிதைகளை வெளியிட்டு வந்தன. இவற்றுள் மணிக்கொடி இதழ் முதன் முதலில் தோன்றி புதுக்கவிதைகளை வெளியிட்டு புதுமைபடைத்ததால் இதனை மணிக்கொடி காலம் என்று
அழைத்தனர்.
மணிக்கொடி கால புதுக்கவிதை முன்னோடிகளான
ந. பிச்சமூாத்தி,கு.ப.ராசகோபாலன். க.நா. சுப்பிரமணியன், புதுமைப்பித்தன் போன்றோர் சிறப்புப் பெற்று திகழ்ந்தனர். வல்லிக் கண்ணன் சமுதாயச் அமர வேதனை என்ற கவிதையில் சீர்கேடுகளை இடித்துரைத்தார். இவரின் 'புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்' என்ற நூல் 1978ல் சாகித்திய அகாடமி விருது பெற்றது.
எழுத்துக்காலம்:
கவிஞர் சி.சு.செல்லப்பா அவர்கள் தொடங்கிய "எழுத்து” எனும் இதழில் புதுக்கவிதை படைத்தவர்கள் ஏராளம் அவ்வாறு கவிதை படைத்தவர்கள் ஒரே அணியாகத் திரண்டனர். 1959 முதல் 1970 வரையிலான அவர்களின் கவிதை படைத்திட்ட காலத்தை "எழுத்துக் காலம்" என்றே அழைத்தனர்.
எழுத்து, சரஸ்வதி, இலக்கிய வட்டம். நடைதாமரை கசடதபற போன்ற இதழ்கள் இக்காலகட்டத்தில் புதுக்கவிதை படைத்தன. கவிஞர் 'பசுவய்யா' கவிதைகள் தமிழுக்கு ஆக்கமும் ஊக்கமும் தருவதாய் அமைந்தது. சி. மணி 'நரகம்' என்ற சிறப்பானதொரு படைப்பினை உருவாக்கினார். மேலும் சி.சு.செல்லப்பா அவர்கள் புதுக்கவிதையாளர்களின் படைப்புகளையும் அவர்களுக்குப் பின் வந்தவர்களின்படைப்புகளையும் தொகுத்து நூலாக வெளியிட்டு திறனாய்வு செய்த சிறப்பினைப் பெற்றவர்.
'எழுத்து' இதழின் இறுதிக் காலத்தவர் கே. இராசகோபால் என்று கூறலாம். இவரின் கவிதைகளில் படிமம், குறியீடு ஆகியவை சிறப்புற கையாளப்பட்டு இருக்கும். ந. பிச்சமூர்த்தி அவர்கள் தொடங்கி வைத்த புதுக்கவிதை இயக்கம் எழுத்து இதழிலும் தொடர்ந்தது மயன், சிட்டி, வல்லிக்கண்ணன்,சி.சு.செல்லப்பா, க.நா.சுப்பிரமணியன் போன்றோர் எழுத்துக் காலத்திற்கு பெருமை சேர்த்த கவிஞர்கள் ஆவர்.
வானம்பாடிக் காலம்:
“எழுத்துக் காலத்திற்குப்” பின் தோன்றிய மக்கள் திரளே மானிடம் பற்றியும் மானுடத் தேவை பற்றிய கேள்வியை எழுப்பி புதுக்கவிதை பாடியதால் இது "வானம்பாடிக் காலம்" எனப்படுகிறது. வானம்பாடி, தீபம், கணையாழி, சதங்கை ஆகிய இதழ்கள் புதுக்கவிதைகளுக்கு முன்னுரிமை அளித்து படைப்புகளை வெளியிட்டன. இக்கவிதையில் இவர்கள் நம்பிக்கை, கொள்கை. நேர்மை, கூட்டுறவு சிந்தனை, உண்மை போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளித்தனர்.
சாதி, சமய, பொருளாதார வேறுபாடுகள் சமூக மற்றும் சமுதாய சீரழிவுகள், சிக்கல்கள் சுரண்டல்கள் ஆகியவற்றை களைய நினை ப்பவர்கள் இவர்கள். புவியரசு, ஞானி, பாலா, சக்திக்கனல் ஆகியோர் புதுக்கவிதைத் துறைக்கு வந்து இணைந்தவர்கள். நா. காமராசனின் "சூரியகாந்தி”, “கறுப்பு மலர்கள் ", கவிஞர் மீராவின் கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள், அப்துல் ரஹ்மானின் சமாதான தேவதை, தமிழ் நாடனின் மண்ணின் மாண்பு போன்றவை சிறப்புடையவை, புவியரசனின் 'சிலுவைப்பாடு" சிந்தனையை தூண்டுவதாக அமைகின்றன.
வானம்பாடி" கவிஞர்களின் கூட்டு
முயற்சியால்'வெளிச்சங்கள்' எனும் கவிதை நூல் தொகுப்பு வெளிவந்தது. இந்நூலில் இன்றைய மக்களாட்சி பற்றியும்,சுரண்டல்கள் பற்றிய சாடுதல்கள் உள்ளன. புதுக்கவிதை செய்திகளை நேரடியாகச் சொல்லாமல் மற்றொரு குறியீட்டின் வழியாகச் சொல்வதே இதன் சிறப்பாகும். இவை நடைமுறை சிக்கல்களை படம் பிடித்துக் காட்டுகிறது.
1999 -ல் எஸ்.அப்துல்ரகுமான் "ஆலாபனை" என்ற புதுக்கவிதைக்காகவும்
2002ல் கவிஞர் சிற்பி பாலசுப்பரமணியன் "ஒரு கிராமத்து நதி" என்ற நூலுக்காகவும், 2004ல் ஈரோடு தமிழன்பன் வணக்கம் வள்ளுவன் என்ற புதுக்கவிதைக்காகவும் சாகித்ய விருது பெற்றனர்.
முடிவுரை:
"பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல வகையினானே" - நன்னூல்
"இலக்கணச் செங்கோல் யாப்புச்
சிம்மாசனம் எதுகைப் பல்லக்கு தனிமொழிச் சேனை பண்டித பவனி இவை எதுமில்லாத கருத்துக்கள் தம்மைத் தாமே ஆளக்
கற்றுக்கொண்ட புதிய மக்களாட்சி முறையே புதுக்கவிதை" எனலாம்
மேற்கண்ட கவிஞர்களின் ஆர்வம், முயற்சியால் புதுக் கவிதை இன்று தன்னிகரில்லா தனி இடத்தைப் பிடித்து விளங்குகிறது என்பதனை இக்கட்டுரை மூலம் அறியலாம்.
Comments
Post a Comment